என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் கமிஷனர்"
சென்னை:
தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.
திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பி ரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் ஆகியவையே அந்த 21 தொகுதிகளாகும்.
இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று எந்த கோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாதது மக்கள் விரோத நடவடிக்கை என்று தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் இதில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களை சுமூகமாக நடத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பிரதிநிதிகள் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் 3 தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதற்கு பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “3 தொகுதிகளின் தேர்தல் பற்றி கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம்” என்றார்.
இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து தன்னை எம்.எல்.ஏ. ஆக அறிவிக்க கோரி சரவணன் புதிய மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு காரணமாகவே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்ததும், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சரவணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று சரவணன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இதுபோல அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் தேர்தல் வழக்குகளையும் திரும்பப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #ElectionCommissioner #Byelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்